‘என் மகளையே அடிப்பியா’… அரசுப் பள்ளிக்கு புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய பெற்றோர்.. அதிர்ச்சி சம்பவம் !!
Author: Babu Lakshmanan21 March 2023, 8:00 pm
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தி, பொருட்களை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இருக்கும் தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக குருவம்மாள் மற்றும் உள்ளிட்ட ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இதே பகுதியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை தலைமை ஆசிரியர் குருவம்மாள் கண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவர்களது உறவினர்களை வரவழைத்து, பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் குருவம்மாள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பாரத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக எட்டயபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.