தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்… நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் ; ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கம் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
21 October 2022, 8:53 am

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தை கலவரமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஆனால், தூத்துக்குடி கலவரம் பற்றி நொடிக்கு நொடி காவல்துறை சார்பில் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஒரு நபர் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யாராக இருந்தாலும் அவர்களுக்கு என்ன விதமான அரசியல் பின்புலம் இருந்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும், பொதுமக்கள் தான் காவல்துறையினரை தாக்கியதாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தவறுகள் அனைத்தும் காவல்துறை என கூறியுள்ளது. இதனால், நடிகர் ரஜினிகாந்த் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும், என அவர் கேட்டுக்கொண்டார்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!