ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை… மதுபோதையில் இருந்த இளைஞர் கைது : நள்ளிரவில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
3 November 2023, 9:49 am

தஞ்சை ; ஶ்ரீவைகுண்டம் அருகே ஏரல் ஹோட்டலில் நடந்த தகராறில் சப்ளையர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த ராசு என்பவரது மகன் சேகர் (64). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அதே ஹோட்டலில் களக்காடு பகுதியை சேர்ந்த சிவசூரியன் (25) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் ஹோட்டலிலேயே இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், சிவசூரியன் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்ததால் சேகர் சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவசூரியன் அங்கிருந்த கம்பால் சேகரை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேகர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுபோதையில் இருந்த சிவசூரியனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 352

    0

    0