உணவு பார்சல் கட்டுவதில் தகராறு.. பரோட்டா மாஸ்டர் வெட்டிக் கொலை… மதுபோதையில் மர்ம கும்பல் வெறிச்செயல்!

Author: Babu Lakshmanan
6 August 2022, 2:02 pm

தூத்துக்குடியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், பரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் கருப்பசாமி. இவர் தூத்துக்குடி 3வது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி அன்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்த 3 பேர் பரோட்டா பார்சல் கேட்டு தகராறு செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதையடுத்து கடையின் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முடிவைத்தானேந்தல் ஓதுவார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பொன்செந்தில் முருகன் (31), என்பவர் உட்பட கடை ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 1 மணி அளவில் கடையில் வியாபாரம் முடிந்து கடை ஊழியர்களான பொன் செந்தில் முருகன், திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ் மில் தெரு முருகேசன் மகன் சாமுவேல் (37), அப்பகுதியில் கடை நடத்தி வரும் பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனிமுருகன் (55) ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் காலனி அருகே சென்றபோது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு கொலை செய்யப்பட்டவர் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் வழக்குப்பதிந்து, தூத்துக்குடி 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த தவசி பெருமாள் மகன் கற்குவேல் (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 806

    0

    0