குடும்ப நிகழ்வுக்காக வெளியூர் சென்ற பெண்… திரும்பி வந்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி ; போலீசார் விசாரணை…!!

Author: Babu Lakshmanan
2 May 2024, 2:40 pm

தூத்துக்குடி அய்யாசாமி காலணியில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சுமார் ரூ 20 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3வது தெருவை சேர்ந்தவர் அசரியா மனைவி எஸ்தர் (52 ) இவருக்கு ஒரு மகள் உள்ளார். படித்துக் கொண்டிருக்கிறார். கணவர் அசரியா இறந்து விட்டதால், வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்தியின் அய்யாசாமி காலனி வீட்டில் வசித்து வரும் அவரது 3 பிள்ளைகளையும் கவனித்து வருகிறார்.

மேலும் படிக்க: வீடு, எருமை, தாலி.. என்ன பிரதமரே இப்படி விரக்தியில் பேசறீங்க : ராகுல் காந்தி ATTACK!

இந்நிலையில், கோவையில் அவரது உறவினருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டு இன்று எஸ்தர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது, அவர்களது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எஸ்தர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், திட்டமிட்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து தங்க நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0