‘எங்க சாவுக்கு வேறு யாரும் காரணமில்ல’.. கடிதம் எழுதி வைத்து விட்டு கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவு!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 10:36 am

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் மயிலேறி (40) என்பவருக்கு திருமணமாகி இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். அதேபோல், அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி மகள் மகராசி (33) என்பவருக்கும் திருமணம் ஆகி மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், மயிலேறி மற்றும் மகராசி இருவருக்கும் இடையே தவறான பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த 29.05.22 அன்று மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரும் காணாமல் போனதாக மயிலேறியின் மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் இன்று வெள்ளாரம் ஊருக்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் உடல் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அது காணாமல் போன மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரின் உடல் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரும், “எங்களது சாவுக்கு நாங்களே காரணம், யாரையும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டாம்,” என்று கடிதம் எழுதி வைத்து விஷம் அருந்தி இறந்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 751

    0

    0