என்னது, கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்வீர்களா..? வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்… கலக்கத்தில் காதலர்கள்..!

Author: Babu Lakshmanan
1 January 2024, 1:35 pm

“கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவோம், இதை கட்டாயம் செய்வோம்” என ராமநாதபுரம் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘லோகேஷ் முத்தரையர்’என்பவருடைய சமூக வலைதள பக்கத்தில் நான்கு ஐந்து இளைஞர்கள் ஒன்று கூடி தங்களுடைய இயக்கக் கொடி மற்றும் பதாகையை கையில் பிடித்தவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தொடர்ச்சியாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், இனியும் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க மாட்டோம் எனவும், அவ்வாறு மீறி கலப்புத் திருமணம் செய்பவரை கட்டாயம் கொலை செய்வோம் என்றும், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாக அந்த வீடியோவில் கூறியிருந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

எனவே, இதுபோன்ற அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும், காதலித்து கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ