“கலப்பு திருமணம் செய்தால் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போவோம், இதை கட்டாயம் செய்வோம்” என ராமநாதபுரம் இளைஞர்கள் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ‘லோகேஷ் முத்தரையர்’என்பவருடைய சமூக வலைதள பக்கத்தில் நான்கு ஐந்து இளைஞர்கள் ஒன்று கூடி தங்களுடைய இயக்கக் கொடி மற்றும் பதாகையை கையில் பிடித்தவாறு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தொடர்ச்சியாக அவர்கள் சார்ந்த சமுதாயத்தில் கலப்பு திருமணங்கள் நடைபெற்று வருவதாகவும், இனியும் கலப்புத் திருமணத்தை ஆதரிக்க மாட்டோம் எனவும், அவ்வாறு மீறி கலப்புத் திருமணம் செய்பவரை கட்டாயம் கொலை செய்வோம் என்றும், கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்வதை பெருமையாக கருதுவதாக அந்த வீடியோவில் கூறியிருந்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எனவே, இதுபோன்ற அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். மேலும், காதலித்து கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.