கேள்வி கேட்டதால் ஆத்திரம் ; வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய வாலிபர் ; தடுக்க வந்தவருக்கும் கத்திகுத்து!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 2:52 pm

தூத்துக்குடியில் இரவு நேரத்தில் தெருவில் நின்று வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை கண்டித்த வழக்கறிஞர் உட்பட இருவரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் ராஜ்குமார் (42). இவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நேற்று இரவு அப்பகுதியில் ஒருவர் நீண்ட நேரமாக செல்பொனில் பேசிக்கொண்டிருப்பதாக அவரது பக்கத்து வீட்டை சார்ந்த அந்தோணி மகன் அனீஸ் (25) என்பவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற ராஜ்குமார் அங்கு செல்பொனில் பேசிக் கொண்டிருந்த, தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் பேச்சிமுத்து (35) என்பவரிடம், ராஜ்குமார், “நீங்கள் யார் என்றும், உங்களை தெருவில் உங்களை பார்த்ததே இல்லையே, இங்கு என்ன வேலை,” என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அப்பகுதியில் இருந்த தனது அண்ணன் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து வந்து வழக்கறிஞர் ராஜகுமாரின் மார்பில் கத்தியால் கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க முயன்ற அவரது பக்கத்து வீட்டை சார்ந்த அனீஸ்க்கும் கத்தி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்கு பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 436

    0

    0