பட்டப்பகலில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை… 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரம்… ஒரே குடும்பத்தில் தொடரும் கொலைகள்.. !!
Author: Babu Lakshmanan22 February 2023, 4:04 pm
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரம் பகுதியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பணிகளை முடித்துவிட்டு சோரீஸ்வரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை அங்கு மறைந்திருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி கொலை செய்தது.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட இறந்த வழக்கறிஞர் முத்துக்குமாருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது சகோதரர் சிவக்குமார் என்பவர் தெற்கு காவல் நிலையம் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று இவரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் பதற்றம் நிலை வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.