தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 10ம் தேதியன்று இரவு சதீஷ்குமார் கோமஸ்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, ஜெயக்குமார், அவரது நண்பர்களான கீழ அரசரடி பகுதியை சேர்ந்த சந்தனபாரதி , துப்பாஸ்பட்டி பகுதியை சேர்ந்தவர்களான முருகன், ஆதிராஜா, பேச்சிராஜா,வேல்சாமி மற்றும் தாளமுத்துநகர் கொத்தனார் காலனியை சேர்ந்த கார்மேகம் ஆகியோருடன் இருசக்கர வாகனங்களில் வந்து அங்கு நின்று கொண்டிருந்த சதீஷ்குமாரை கடத்திச் சென்றனர்.
ஜெயக்குமாருக்கு சொந்தமான கீழ அரசரடி பகுதியில் உள்ள கருவாடு கடையில் அடைத்து வைத்து சதீஷ்குமாரை அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, பின்பு அவரை கீழ அரசரடி பகுதியில் உள்ள சுங்கசாவடி அருகே விட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயக்குமார், சந்தனபாரதி, முருகன், ஆதிராஜா, பேச்சிராஜா, கார்மேகம் மற்றும் வேல்சாமி ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.