குடிபோதையில் தம்பியை கம்பியால் அடித்துக் கொன்ற அண்ணன்… கூலாக டாஸ்மாக் சென்று மதுஅருந்திய சிக்கினார்..!!

Author: Babu Lakshmanan
17 December 2022, 1:09 pm

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சொத்து பிரச்சனையில் சொந்தத் தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா. இவரது மூத்த மகன் பாண்டித்துரை (29), இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். அண்ணன் தம்பி இருவருக்கு சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது இருவருக்கும் தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு மந்திதோப்பு சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு கடை அருகே அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, இருவருக்கும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது அருகில் இருந்த கம்பியை கொண்டு அண்ணன் பாண்டித்துரை, தம்பி கருப்பசாமியை அடித்து கொலை செய்துவிட்டு கூலாக மறுபடியும் டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது வாங்கி அருந்தியுள்ளார். டாஸ்மாக் கடையில் அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கருப்பசாமி கிடப்பதை பார்த்து, உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து கருப்பசாமி உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கிருந்த பாண்டித்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ