தூத்துக்குடி முள்ளக்காடு அருகே தாயுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த மகன்கள், உப்பள தொழிலாளியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உப்பள தொழிலாளி முனியசாமி. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் முனியசாமிக்கும், அதே பகுதியில் வசித்து வந்த கணவனை இழந்த நிர்மலா என்ற பெண்ணிற்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த தொடர்பு நிர்மலாவின் மகன்களான சதீஷ் மற்றும் சுதாகருக்கு தெரிய வர, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனியசாமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் முனியசாமி தொடர்ந்து நிர்மலாவை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், முனியசாமி நேற்று மாலை தனது சைக்கிளில் சாமி நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, அங்கே வந்த சதீஷ் மற்றும் சுதாகர், முனியசாமியை சைக்கிளிலிருந்து கீழே தள்ளி அவரது கழுத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே முனியசாமி பரிதாபமாக இருந்தார்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல்துறையினர் முனியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முனியசாமி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடிய முனிசாமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் பல்வேறு போதைகள் காரணமாக குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறினார்கள்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.