இரவு நேரங்களில் ஆட்டோக்கள் தான் டார்கெட்… தூத்துக்குடியை அலறவிடும் திருடன் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 8:55 am

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்படும் ஆட்டோக்களில் பேட்டரியை திருடும் காட்சிகள் சமூக வளைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி அண்ணா நகர் 11வது தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் அந்த பகுதியில் வந்த நபர் ஒருவர் தலையில் துணியை கொண்டு மூடியபடி ஆட்டோவில் இருந்த பேட்டரியை கலட்டி எடுத்து செல்லும் காட்சிகள் சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றது.

மேலும், இரவு நேரங்களில் இதுபோல் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Impact of PART2 MOVIES on Theater Ownersஇனி பார்ட்-2 படமே வேண்டாம்…கதி கலங்கிய தியேட்டர் ஓனர்கள்..!
  • Views: - 367

    0

    1