தூத்துக்குடியில் முன்னாள் குமாஸ்தா தலை துண்டித்து படுகொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளை சினிமா காட்சி போல விரட்டி சென்று தனிப்படை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோடு பழைய தொழிற்பேட்டை உள்ளே 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நள்ளிரவு மத்திய பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் படிக்க: வார இறுதியில் சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம்… சவரனுக்கு ரூ.160 குறைவு…!!
அங்கு தூத்துக்குடி குருஸ்புரத்தைச் சேர்ந்த முன்னாள் குமாஸ்தாவாகவும், தற்போது நில புரோகராகவும் இருந்து வரும் பால்ராஜ் (60) கழுத்து உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இந்நிலையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, எஸ்.பியின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை தூத்துக்குடி நெல்லை பைபாஸ் சாலையில், அதிகாலை வேளையில் போலீஸ் வாகனத்தில் விரட்டிச் சென்றனர்.
சினிமா காட்சி போல இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை பின் தொடர்ந்து நீண்ட நேரம் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்து அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் அவர்களுக்கு கை முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் ராஜபிரபு தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி முத்து கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த கந்தசுப்பிரமணியன் மற்றும் தூத்துக்குடியில் வசித்து வரும் மதுரையை சேர்ந்த ஜெயராம் என்பது தெரிய வந்தது. இவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பால்ராஜை அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இந்தக் கொலையில் இவர்கள் இருவரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? கொலைக்கான காரணம் இது மட்டும்தானா..! என்பது குறித்து தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…
'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…
ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…
மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…
இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…
சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…
This website uses cookies.