திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சுவாமி தரிசனம்.. மூலவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு..!!
Author: Babu Lakshmanan20 March 2023, 7:38 pm
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகன் சபரீசன், தனது நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நண்பருடன் வந்தார். கோவிலில் அவர் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து கோவில் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்த அவர் பேட்டரி கார் மூலம் செல்லக்கனி விருந்தினர் மாளிகை வந்தார் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரீசன், வள்ளிகுகை முன்பு சிறப்பு யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.