தூத்துக்குடி திருவிக நகரில் காதல் திருமணம் செய்து 3 நாள் ஆன இளம் தம்பதியை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்பவர் மாரி செல்வம். இவர், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி அன்று, தூத்துக்குடி திருவிக நகரைச் சார்ந்த கார்த்திகா என்பவரை காதல் திருமணம் செய்து உள்ளார். அன்று மாலை கார்த்திகாவின் உறவினர்கள் வந்து சத்தம் போட்டு சென்றுள்ளனர்.
பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி இவர் கல்யாணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகரில் இவர் வசித்து வரும் வீட்டிற்கு வந்த ஒரு மர்ம கும்பல், கணவன் – மனைவி இருவரையும் சாரா மரியாக வெட்டி கழுத்தறுத்தை கொலை செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள், ஓடி வர அங்கிருந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. பின்னர், அருகில் இருந்தவர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ரூரல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, இந்த சம்பவத்தை செய்தது பெண் வீட்டார் என்ற முதற்கட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து மூன்று நாட்களே ஆன நிலையில் கணவன், மனைவி இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.