வீட்டின் மீது அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. தூத்துக்குடி அருகே பரபரப்பு… பின்னணியில் கஞ்சா போதை இளைஞர்கள்?

Author: Babu Lakshmanan
18 January 2024, 5:06 pm

தூத்துக்குடி மேட்டுப்பட்டி சங்குகுழி காலனி பகுதியில் மர்ம நபர்கள் வீட்டின் மீது வீசிய பெட்ரொல் குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மேட்டுபட்டி சங்குகுளி காலணி பகுதியில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர், அந்த பகுதியில் உள்ள சேது ராமன் என்பவரது வீட்டில் அவர் குடும்பத்தினருடன் தூங்கிகொண்டிருந்த வேளையில், 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசிமாக உயிர் தப்பிய சேதுராமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் மற்றும் அவரது பேரன்,பேத்தி ஆகிய குடும்பத்தினர், இது தொடர்பாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேட்டுபட்டி சங்குகுளி காலணி பகுதியில் உள்ள சேதுராமன் உறவினர் வீட்டில் உள்ள பெண்ணிடம் கஞ்சா போதையில் சிலர் தகராறு செய்ததாகவும், அதனை சேதுராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் தட்டி கேட்டதால் அந்த பகுதியை சார்ந்த சிலருக்கும் சேதுராமன் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 449

    0

    0