எமனாகும் பிளாஸ்டிக் கழிவுகள்.. அலட்சியமாக வீசி எறிவதால் தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்..!

Author: Vignesh
3 August 2024, 4:43 pm

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று செத்து மிதந்த மீன்கள் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீன்களை அகற்றினார்.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தெப்பக்குளம் இந்த தெப்பக்குளத்தில் பல்வேறு வகையான பண்ணா, எழுது உள்ளிட்ட ஏராளமான மீன்கள் வளர்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் தெப்பக்குளத்திற்கு வரும் பொதுமக்கள் மீன்களுக்கு உணவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தெப்பக்குளம் வெகு நாளாக சுத்தம் செய்யப்படாமல் அதில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற ஏராளமான மீன்கள் இன்று காலை தெப்பக்களும் முழுவதும் செத்து மிதக்க துவங்கியது. இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் செத்து மிகுந்த மீன்களை அப்புறப்படுத்தினர்.

மேலும், தெப்பக்குளத்தில் செத்து மிகுந்த மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்ததா அல்லது வேறு ஏதேனும் வேதிப்பொருட்கள் தெப்பக்குளத்தில் மர்ம நபர்கள் யாரும் கலந்து அதன் காரணமாக நீர் மாசுபட்டு இறந்ததா என மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ