தூத்துக்குடியில் சப் இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொலை செய்ய முயன்றதாக 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாதா கோவில் தெருவில் சேர்ந்தவர் யோகதுரை மகன் சந்தனராஜ் என்ற சண்டல் (42). தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் செல்வம் (45). இவர்கள் இருவர் மீதும் கொலை மற்றும் வழிப்பறி உள்பட பல வழக்குகள் உள்ளது. நேற்று இரவு இருவரும் சந்தன்ராஜ் வீட்டில் இருப்பதாக தென்பாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் வீட்டுக்கு சென்றனர். அங்கு இருவரும் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முகிலரசன் 2 பேரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.