தொடரும் மனவிரக்தி… காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை … போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 12:59 pm

தூத்துக்குடி ; ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டியில் குடும்ப பிரச்சனை காரணமாக போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி காவல் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு கொடிவேல் (40) என்பவர் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மேலும், இவர் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ள இவர், அயல் பணி காரணமாக புளியம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் .

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் இருந்த கொடிவேல் திடீரென அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து செய்துள்ளார். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏட்டு கொடிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொடிவேல் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

காவலர் குடியிருப்பில் ஏட்டு ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!