காட்டுக்குள் இளம்பெண்ணுடன் பாலியல் லீலை… வசமாக சிக்கிய காவலர் ; காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
26 July 2023, 9:59 pm

கோவில்பட்டி ; கோவில்பட்டி அருகே டி.எஸ்.பி அலுவலக காவலரின் பாலியல் சர்ச்சை வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரன் கடந்த 2009ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தற்போது விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், காவலர் இராஜேந்திரன், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தபோது, சிலர் வீடியோ எடுப்பதை கண்டு பயந்து ஓடும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில் காவலர் இராஜேந்திரன், டி-சர்ட் – லுங்கி அணிந்து கொண்டும், அருகில் சுடிதார் அணிந்து துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மூடியபடி, இளம்பெண் ஒருவரும் மர்ம நபர்கள் இவர்களை வீடியோ எடுப்பதைக்கண்டு பயந்து ஓடுவது போன்றும், ஆனால் அந்த மர்ம நபர்கள் விடாமல் பின்தொடர்ந்து வீடியோ பதிவு செய்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் காவல் துறை வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் 3 உதவி ஆய்வாளர்கள், 1 ஆய்வாளர் என பலர் பாலியல் புகார், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மற்றும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு காவலரின் சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 447

    0

    0