தடுப்புக் கம்பியில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து… இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் உள்பட 3 பேர் உடல்நசுங்கி பலி..
Author: Babu Lakshmanan15 June 2022, 11:44 am
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்தில் ஓட்டுநர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அரசங்குளம் அருகே சென்னைக்கு சென்ற தனியார் ஆம்னி பஸ் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில்; 2 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் உடல் அடையாளாம் காணப்படவில்லை. கயத்தார் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்றிரவு (செவ்வாய்கிழமை) சென்னைக்கு கிளம்பியுள்ளது. ஆம்னி பஸ்சினை ராஜபாளையத்தினை சேர்ந்த பாண்டிசெல்வம் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இதில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
ஆம்னி பஸ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே அரசங்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த போது, திடீரென பஸ் நிலை தடுமாறி தடுப்புகம்பிகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பஸ் ஓட்டுநர் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்தும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று பஸ்சில் சிக்கிகொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாகர்கோவிலை சேர்ந்த சிவராம், ஆம்னி பஸ் டிரைவர் பாண்டிசெல்வம் மற்றும் அடையாளம் தெரியாதவர் என 3 பேர் பரிதபமாக உயிரிழந்தனர்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கயத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
0
0