லாரியில் இருந்து பிரிந்து வந்த கயிறு.. தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி

Author: Babu Lakshmanan
15 December 2022, 11:28 am

தூத்துக்குடி அருகே உரம் ஏற்றி வந்த லாரியில் கயிறு பிரிந்து வந்ததால் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரின் கழுத்தில் சுற்றி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகன் முத்து (30). இவர் இன்று இருசக்கர வாகனத்தில் ஏரல் நோக்கி வரும்பொழுது, எதிரே வந்த உரம் ஏற்றி வந்த லாரியின் ஒரு மூட்டை சரிந்து கீழே விழுந்தது.

அப்போது, அதில் இருந்த கயிறு இருசக்கர வாகனத்தில் வந்த முத்துவின் கழுத்தில் சுற்றி கீழே இழுத்துப் போட்டது. இதனால், அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, ஆம்புலன்ஸ் சீக்கிரமாக வந்த காரணத்தினால், தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் சாலையில் எதிரே சென்ற வாகன ஓட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.

  • Baby John box office performanceசும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த அட்லீ…வசூலில் திணறும் பேபி ஜான்…!
  • Views: - 489

    0

    0