தரமற்ற முறையில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள்… காங்கிரஸ் கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டம்… திமுகவுக்கு நெருக்கடி..!!

Author: Babu Lakshmanan
19 November 2022, 6:10 pm

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தரமற்ற முறையில் நடப்பதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தலைமையில் அந்த பகுதி மக்கள் பணிகள் நடைபெறும் உள் விளையாட்டு அரங்கிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் 1100 கோடி செலவில் ஸ்மாட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் பல பணிகள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு பகுதியான அசோக் நகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்க பணிகள் தரமற்ற பொருட்களை கொண்டு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்தும், தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், 34வது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ் தலைமையில் அந்த பகுதியினர் பணிகள் நடைபெறும் உள் விளையாட்டு அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :- தூத்துக்குடியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் மாநகராட்சி பகுதிகளில் 34 வார்டு உட்பட நகரின் 5 இடங்களில் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதில் 34வது வார்டான அசோக் நகர் பகுதியில் சுமார் ஒன்றரை கோடி செலவில் நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகள் அனைத்தும் தரமற்ற பொருட்களை கொண்டு நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத காரணத்தால் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும், இந்த தரமற்ற பணிகளை நிறுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மிகபெரிய போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சட்ட ரீதியாக சென்றும் நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்ய இருக்கிறோம், எனத் தெரிவித்தனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 469

    0

    0