தூத்துக்குடி ; தூத்துக்குடியில் போலீசார் தாக்கியதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பாலமுருகன். இவர் இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து பாதுகாப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கூறுகையில், “கடந்த 23-03-2022 அன்று எனது விட்டின் முன்பாக வைத்து, கருப்பசாமி மகன் அருணச்சாலம், பால்ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து என்னை தாக்கினார்கள். உடம்பு முழுவதும் காயங்கள் ஏற்பட்ட நான் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இதற்கு முன்பாக ஏற்கனவே 4 பேர் என்னை கம்பால் அடித்து கொலை மிரட்டல் விட்டார்கள். காவல்துறையினரிடம் மேற்படி நபர்கள் மீது புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
என்னை தாக்கிய 6 பேரிடமும் காவல்துறையினர் பணம் வாங்கிக்கொண்டு என்னை தாக்கினார்கள். இன்ஸ்பெக்டர் சித்திரகலா எதிரிகளிடம் கூட்டு சேர்ந்து எனது வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சூரையாடி சேதப்படுத்தியுள்ளனர். என்னால் ஊருக்குள் வந்தால் ஆளவைத்து கொலைசெய்து விடுவேன் என்று மிரட்டுகின்றனர். ஆகவே எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் நான் மண்ணெண்ணெய் ஊற்றி சாக வேணடும்.
நான் அரசு மருத்துவமனையில் முன்று நாட்களாக உள்நோயளியாக இருந்த போது எனது வீட்டில் இருந்த பொருட்களையும், ரூ.65,000 பணத்தையும் எடுத்து சென்று விட்டார்கள். எனது வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டியையும் சேதப்படுத்தி உடைத்து விட்டனர். எனவே, இன்ஸ்பெக்டர் மீதும், என்னை கொலை செய்வேன் என மிரட்டும் 6 நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.