திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன் வடலியில் பழிக்குபலியாக உப்பளத் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தலைவன்வடலி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (48). இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவர் தலைவன் வடலி ஆவரையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை செய்யப்பட்ட சண்முகராஜ் உறவினர்கள் தலைவன்வடலியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் தலைவன் வடலி பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற கல்லூரி மாணவன் தலை துண்டாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால் தலைவன்வடலி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சண்முகராஜ் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் உப்பள தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.