தூத்துக்குடி – திருச்செந்தூர்… விரைவில் வரப்போகுது : குட்நியூஸ் சொன்ன திமுக அமைச்சர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 September 2024, 8:16 pm
தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் அண்ணாநகர், பிரையண்ட்நகர் பகுதிகள் சந்திக்கும் இடத்தில் வி.வி.டி. சிக்னல் அமைந்துள்ளது. இந்த சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரியும் இருக்கிறது.
இதனால் அந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள்.
இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வி.வி.டி. சிக்னல் பகுதியில் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி, அந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அங்குள்ள வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.. ஆகவே பணிகள் நிறுத்தப்பட்டது….
இந்நிலையில், மேம்பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சமூகநல மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் ஆய்வு செய்தனர்…
ஆய்வுக்கு பின், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பாலங்கள் உடைந்தது.
இதில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.. உடனடியாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக 13 நாட்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 140 கோடி பணம் ஒதுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது..
தூத்துக்குடி மாவட்டத்தில் 83 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 110 கோடி பணம் ஒதுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.. இன்னும் 46 பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும்.. அதில் ஏரல் மேம்பாலம் டெண்டர் விடப்பட்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும்…
மேலும், தூத்துக்குடி மாநகரில் இரண்டு ரயில்வே மேம்பாலம் வேண்டும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை விடுத்தார்.. ஒன்று, விவிடி சிக்னல் பகுதியில் உள்ள மேம்பாலம், பின்னர், ரயில்வே கேட் மேல்மட்ட பாலம் இது இரண்டும் அறிவிக்கப்பட்டு போட முடியாத சூழ்நிலையில் உள்ளது.. காரணம் மின்சார கம்பங்கள் அப்புறப்படுத்துவது, மாநகராட்சி பகுதிகள் என்பதால் குடிநீர் பைப், கழிவு நீர் பைப் அப்புறப்படுத்துவது.. இதன் எல்லாமே பாலம் கட்டுவது சாலை விரிவுபடுத்துவதற்கு நிலம் கையகப்படுத்துவது அதற்குரிய பணத்தை கூட அரசாங்கம் ஒதுக்கீடு செய்தது.. ஆனால் நிலம் எடுப்புக்கு வேண்டிய அத்தனை பணிகளும் முடிவடைந்து அதற்கு வேண்டிய தொகைகளும் ஒதுக்கப்பட்டது… ஆனால் அங்குள்ள வியாபாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்று தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருகிறது.. இம்மாதம் 17ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. நியாயமாக அரசாங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று துறை சார்பாக நம்புகின்றோம்.. அந்த தீர்ப்பு வந்தவுடன் இரண்டு பாலங்களுக்கும் டெண்டர் விடப்பட்டு போடப்படும்…
தமிழ்நாட்டில் 4 வழிச்சாலையை ஒன்றிய அரசாங்கம் டோல்கேட் போட்டு அதிக வசூல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.. ஆனால், முதலமைச்சர் சாலை மேம்பாட்டு குறுகிய திட்டத்தை அறிவிக்கலாம் என்று முதல்வரிடம் ஒப்புதல் கேட்டோம். உடனடியாக ஒப்புதல் அளித்து முதலமைச்சர் மேம்பாட்டு திட்டம் என்ற அடிப்படையில் 4 வழிச்சாலை போடப்படுகிறது..மேலும், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் இருக்கிறதோ அங்கெல்லாம் சாலைகள் போடப்படும்.. அடுத்த நிதியாண்டிலே தூத்துக்குடி டூ திருச்செந்தூர் வரை 4 வழிசாலைகள் போடப்படும் என்றார்.