’எங்களுக்கு அஜிதா அக்கா தான் வேணும்..’ தவெகவில் கோஷ்டி மோதல்.. நிர்வாகியின் பதில் என்ன?

Author: Hariharasudhan
9 December 2024, 11:13 am

தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமில் இருதரப்பு மோதல் வெடித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பலரும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அதேநேரம், தூத்துக்குடி தவெக பொறுப்பாளர்களாக சுஜி மற்றும் அஜிதா ஆகிய இருவர் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜிதா தரப்பில் தவெகவில் இணைய வந்த சிலர், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்து வெளியேறினர். அப்போது அஜிதா தரப்பில் பேசிய ஒருவர், ‘எங்களுக்கு அஜிதா அக்கா தான் வேண்டும். அவர் ஒரு மீனவப் பெண். எங்களது கஷ்டங்கள் அவருக்குப் புரியும்.

Thoothukudi TVK head

அவர் வந்தால் எங்களுக்கு தேவையான நல்ல விஷயங்களைச் செய்வார். ஆனால், இங்கு வந்து பார்த்தால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறது. எனவே தான் இங்கு இருந்து வெளியேறினோம்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, மாற்றுக் கட்சியில் இருந்து 700க்கும் மேற்பட்டோர் இன்று தவெகவில் இணைந்ததாக தூத்துக்குடி மாவட்ட தலைமை நிர்வாகி சாமுவேல் ராஜ் தெரிவித்தார்.

tvk vijay

மேலும், மண்டபத்தில் இருந்து வெளியேறிய்வர்கள் பற்றி தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேறு கட்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறினார். இதனால் தவெக உறுப்பினர்கள் சேர்க்கை சிறப்பு முகாமில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது. அதேநேரம், கட்சி ஆரம்பித்த 10 மாதங்களில் கோஷ்டி மோதல் ஆங்காங்கு முளைத்து வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

இதையும் படிங்க: எப்போ.. Oh my God.. ஷாக்கான ரஜினிகாந்த்.. எதற்காக தெரியுமா?

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அக்டோபரில் தவெக முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். தொடர்ந்து, அவர் சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சு, இன்றுவரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!