ஆசை ஆசையாக காதலித்து திருமணம்… திடீரென எழுந்த சந்தேகம்.. கொலையில் முடிந்த தகராறு ; சிதைந்து போன குடும்பம்!

Author: Babu Lakshmanan
12 December 2022, 7:41 pm

தூத்துக்குடி ; திருமாஞ்சி நகரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் கட்டையால் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள திருமாஞ்சி நகரைச் சார்ந்த ஜான்ராஜ் மகன் இம்மானுவேல் அப்துல்லா. அவரது மனைவி கன்னித்தாய். இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து 5 வருடம் ஆகிறது.

இவர்களுக்கு சையது அலி பாத்திமா, கதீஜா பிஸ்மி என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு, கணவர் அடிக்கடி சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் நடைபெற்ற தகராறில் மனைவி கன்னித்தாயை இமானுவேல் அப்துல்லா கட்டையால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய இமானுவேல் அப்துல்லாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!