பஸ் ஸ்டாண்டில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை… மகள் கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம் ; கணவனின் தம்பி கைது…!

Author: Babu Lakshmanan
14 March 2024, 6:29 pm

கோவில்பட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தூய்மை பணியாளர் கொடூரமாக மகள் கண்முன்னே வெட்டி படுகொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் கீழதெருவை சேர்ந்த வைரமுத்து என்பவரின் மனைவி சின்னமணி (35). இதில் வைரமுத்து கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். இந்த சூழலில் சின்னமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

மேலும், கணவர் இறந்த பின்பு சின்னமணி தனது இரு குழந்தைகளான முத்துகாட்டுராஜ், முத்துதிவ்யா ஆகியோருடன் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் வசித்து வந்துள்ளார். மேலும், சின்னமணி கணவர் வைர முத்துவின் உடன் பிறந்த தம்பி ராஜேஷ்கண்ணன் (20) என்பவர் எப்போதும்வென்றானில் வசித்து வந்துள்ளார்.

சின்னமணிக்கு ராஜேஷ் கண்ணன் மற்றும் பலருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. வேறு நபர்களுடன் இருந்த தொடர்பை துண்டிக்கச் சொல்லி ராஜேஷ் கண்ணன், சின்னமணியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சின்னமணி இன்று காலை எப்போதும்வென்றானில் ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு, தாத்தா வீட்டில் இருந்த முத்துதிவ்யாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவதற்காக பஸ் ஏறுவதற்காக எப்போதும்வென்றான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ராஜேஷ்கண்ணன் சரமாரியாக வெட்டியதில் சின்னமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த எப்போதும்வென்றான் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி