கந்து வட்டி கொடுமை… தவறான முறையில் பேசி டார்ச்சர் ; ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி..!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 4:43 pm

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி, விளாத்திகுளம் நாடார் வீதி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி மனைவி பத்மாதேவி (40), தற்போது கணவரை பிரிந்து வாழும் இவர், அப்பகுதியை சேர்ந்தவரிடம் 2017ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதில், இதுவரை மாதம் 12 ஆயிரம் ரூபாய் வீதம், 7 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தி உள்ளார்.

இந்நிலையில், மீண்டும் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வட்டி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து தனது வீட்டையும் அபகரித்துக் கொண்டதாகவும் கூறிய அவர், தன்னை அவர் தொடர்ந்து தவறான முறையில் போனில் பேசி வருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார்.

உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, கேனை பறிமுதல் செய்ததுடன் தலையில் தண்ணீரை ஊற்றினர். பின்னர், அவரை அழைத்துக்கொண்டு சிப்காட் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 568

    0

    0