அந்த 3 சமுதாய மக்கள்… அண்ணாமலை சொன்ன ஆதாரம் : தேனி நடைபயணத்தில் திமுக ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 6:41 pm

அந்த 3 சமுதாய மக்கள்… அண்ணாமலை சொன்ன ஆதாரம் : தேனி நடைபயணத்தில் திமுக ஷாக்!!

தேனி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் என் மண் என் மக்கள் ஊர்வலத்தை தேனி நகரில் உள்ள அல்லி நகரத்தில் தொடங்கி பங்களா மேடு வரை வெகு விமர்சையாக நடத்தினார்கள். சாலையின் இரு புறமும் என்று இருந்த பொதுமக்கள். அவரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், தேனியில் நடந்த என் நாடு என் மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கஞ்சா மற்றும் கள்ளச்சாராயத்தால் நாடு சீரழிந்து வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தி.மு.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பேசினார்.

தமிழகத்தில் வீதி எங்கும் கஞ்சா விற்பனை மும்முறமாக நடைபெற்று வருகின்றது. இந்தியா முழுவதும் கஞ்சா விற்பனைக்கு தமிழகம் தலைமை இடமாக மாறிக் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக தேனி மாவட்டம் தமிழகத்தின் தலைமை இடமாக மாறி கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டி பேசினார்.

கம்பம் நகரில் அதிக அளவில் திமுகவினரால் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், கள்ளச்சாராய விற்பனையால் தமிழகம் சீரழிந்து மிகவும் அவலமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்,

கஞ்சாவை கள்ளச்சாராயத்தை டாஸ்மார்க் மது விற்பனையே,
பெண்களின் வன் கொடுமையை,
சாதி ஏற்றத்தாழ்வுகளை கவனிக்காமல் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

சமாதான தர்மத்தை ஒழிக்க மு க ஸ்டாலின் முற்பட்டு வருகின்றார்.
பட்டியலின சமூக மக்களுக்கு அரசியல் அதிகாரம் கொடுத்து நரேந்திர மோடியின் மந்திரி சபையில் 20 அமைச்சர்கள் பட்டியல் இன சகோதர சகோதரிகள் பணியில் இருக்கின்றார்கள்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…