என் சாவுக்கு அந்த 3 பேருதான் காரணம்.. வீடியோ வெளியிட்டு கடன் கொடுத்தவர் எடுத்த விபரீத முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 4:59 pm

பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான காண்ட்ராக்டர் சக்தி குமார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சக்தி குமார் கருப்பம்பாளையத்தை சேர்ந்த காண்டக்டர் வேலை செய்யும் சாதிக் பாஷா என்பவரிடம் சப் காண்டாக்ட் வேலை செய்ததில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை தராமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

சமத்தூரை சேர்ந்த சீட்டு நடத்தி வரும் சேர்ந்த கணேசமூர்த்தி 2 லட்சத்து 20 ஆயிரம் சக்திக்குமாரிடம் கடன் பெற்றதாகவும் தெரிகிறது

ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதனிடம் சுமார் 8 லட்சம் ரூபாய் கொடுத்து வைத்துள்ளதாக தெரிகிறது.

வேலையாட்களுக்கு பணம் கொடுப்பவரிடம் தனக்கு பணம் வேண்டும் என்று வேண்டும் என்ற கேட்ட நிலையில் மூவரும் பணம் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் மன விரக்தி அடைந்த சக்தி குமார் தனது சாவிற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும் தான் காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை வாட்ஸ் அப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சக்தி குமாரை உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!