கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத்தினருடனான, ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜாமத் அமைப்புகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜமாத் அமைப்பினர் கூறும் போது, கோவை கார் வெடி விபத்திற்கு அனைத்து ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளோம்.
இதை வைத்து அரசியல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த ஜமாத்திலும் இல்லை. வழக்கில் தொடர்புடையவர்கள் ஐடியாலஜியால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள், என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளவர்கள்.
என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தை எப்படி நிகழ்த்தினார்கள், என்.ஐ.ஏ உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது. இஸ்லாம் பயங்கரவாதத்தை ஒரு போதும் போதிப்பது இல்லை என கூறினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஏதும் தகவல்கள் இருந்தால் காவல்நிலையத்திற்க்கும் ,மாவட்ட நிர்வாகத்திற்க்கும் தகவல் அளிக்கும்படி ஜமாத்துகளுக்கு அறிவுறுத்திருக்கிறோம்.
முழு ஒத்துழைப்பைக் ஜமாத்துகள் வழங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியா வாரியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பாஜக அறிவித்த பந்த் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என கூறினார்.
தொட்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரைக் பொறுத்தவரைக்கும் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது.
கூடுதலாக போலீஸார் ரோந்து பணியில் உள்ளார்கள், உளவுத்துறையை இன்னும் ground level பலபடுத்த திட்டமிட்டுள்ளோம். வழக்கு NIA வுக்கு மாற்றுவது குறித்து முறையான communication வந்ததும் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜமாத்துகள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். கோவை தற்போது அமைதியாக உள்ளது. தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம் , போரட்டத்திற்க்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.