பெண்களை ரொம்ப கேவலமாக பேசக்கூடியவர்கள் அந்த ரெண்டு தலைவர்கள்தான் : ஜோதிமணி விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 April 2025, 2:11 pm

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு மிகவும் வரவேற்க கூடிய தீர்ப்பு. ஒரு வரலாற்று சிறந்த தீர்ப்பு.

எந்த கட்சி அரசாங்கமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தை ஒரு அரசியல் கட்சி பிரதிநிதியாக நியமிக்கப்படுகிற ஒரு ஆளுநர் பாஜகவின் மற்றொரு மாநில தலைவர் போலவே செயல்படுகிறார்.

தமிழ்நாடு மக்களுக்கு கிடைக்க வேண்டியதை முடக்குவது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்குவது தமிழ்நாடு வளர்ச்சியை கெடுப்பது. இதுபோன்ற தவறான போக்கில் தான் தமிழக ஆளுநர் செல்கிறார்.

தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்ல இனி அரசாங்கங்களும் அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு தான் செயல்பட வேண்டும் சட்டவிரோதமாக ஆளுநர் செயல்படக்கூடாது.

அரசியல் சாசனத்தை மதிக்கக்கூடிய ஆளுநராக இருந்தால் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் பதவியை ராஜினாமா செய்யாமல் அந்தப் பதிவில் ஒட்டிக்கொண்டு உள்ளார். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

உச்ச நீதிமன்றம் உங்களை இவ்வளவு மோசமாக விமர்சித்தாலும் அதற்குப் பிறகு அந்த பதவி இருப்பதற்கு எந்த உரிமையும் தமிழக ஆளுநருக்கு கிடையாது. எனவே உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கனவு காண்பதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் பாஜகவின் பணி அதிமுக என்கின்ற பெரிய கட்சி மக்கள் மத்தியில் நீண்ட காலமாக இருக்கின்ற ஒரு கட்சியை குழி தோண்டி புதைத்து விடுவார்கள். இதுதான் இந்த தேர்தலில் பாஜகவின் ஆகசிறந்த பங்களிப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வெற்றி பெற்றதைப் போன்று சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் மகத்தான வெற்றி அடையும்.

இந்த சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். பாஜக தமிழகத்தில் வெல்வது நடக்கவே நடக்காது. பச்சையாக மாநிலத்துக்கு துரோகம் செய்யும் ஒரு அரசாங்கத்தை எப்படி தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இந்திய மக்களே பொதுவாக புத்திசாலிகள் தான். தமிழ்நாட்டு மக்கள் தேர்தலின் போது அதி புத்திசாலியாக செயல்படுவார்கள். சீர்தூக்கி பார்க்கும் ஒரு அறிவு தமிழக மக்களுக்கு எப்போதுமே உண்டு. அதன் அடிப்படையில் பாஜக தமிழ்நாட்டில் வெல்லப்போவது கிடையாது. அவர்கள் அதிமுக என்கின்ற கட்சியை அழிக்கப் போகிறார்கள்.

எந்த கட்சி உடனெல்லாம் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்தக் கட்சி எல்லாம் மண்ணோடு புதைக்கப்பட்டுள்ளது. அடுத்து அதிமுகவை தான் மண்ணோடு மண்ணாக புதைக்க போகிறார்கள் அதற்கு நான் வருந்துகிறேன்.

நீண்ட காலமாக செயல்பட்ட ஒரு கட்சி இப்படி ஒரு தவறான கூட்டணியால் அழியப்போகிறது. கட்சியை பாஜகவுடன் இணைந்தால் அது அரசியல் தற்கொலைக்கு சமம். எப்படி ஒரு அரசியல் தற்கொலைக்கு அதிமுக துணை போகிறது என்று எனக்கு தெரியவில்லை.

நீண்டகாலமாகவே நான் ஒரு கருத்தை கூறி வருகிறேன் சீமான் என்பவர் பாஜகவின் பி டீம். எப்போதெல்லாம் பாஜகவிற்கு தமிழகத்தில் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சீமான் குரல் கொடுப்பார். அது எவ்வளவோ கேவலமான விஷயமாக இருந்தாலும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகத்தில் பாஜகவை நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவது சீமான் தான். சீமான் போடும் வேடம் வெளி வேடம் தான். சீமான் போன்று பெண்களை மிகவும் கேவலமாக பேசுவது அரசியலில் கண்ணியம் நியாயம் தர்மம் எதுவுமே இல்லாமல் பேசக்கூடிய இரண்டு பேர் தான் தமிழக அரசியல் உள்ளார்கள்.

அதில் ஒருத்தர் சீமான் மற்றொருவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் ஒரே மாதிரி பேசுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

Those two leaders are the ones who speak badly of women says Jothimani MP

சீமான் பாஜக கூட்டணியில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் இனி தமிழ்நாட்டில் பாஜகவிற்கு செயல்படுவார் செயல்பட்டார் செயல்பட்டுக் கொண்டிருப்பார் என்று பேசினார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Leave a Reply