என்னை கடத்தியவர்கள் திமுகவினர் தான்… தேர்தலை தடை பண்ணுங்க : கடத்தப்பட்ட அதிமுக வேட்பாளர் பரபரப்பு பேட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan19 டிசம்பர் 2022, 10:01 மணி
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியின் அடிப்படையில் இன்று பிற்பகல் நடைபெற இருந்தது.
தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் உயர் தாக்கல் செய்யவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் முடிவுகள் வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் மனுதாரர் திருவிகாவை தேர்தலுக்கு முன்பாக மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக முறையீடு செய்து, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், `தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்படாது. நீதிமன்றம் வழியாகவே முடிவு வரும் என்பதால், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட வேட்பாளர் திருவிக செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை கடத்தியவர்கள் திமுகவினர்தான், மேலிடத்தில் இருந்து கும்பலில் ஒருவருக்கு செல்போன் கால் வந்தது. அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
0
0