விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் இயங்கிய அன்பு ஜோதி ஆசிரமத்தில் கடந்த மாதம்10ம் தேதி ஆசிரமத்தில் மனநல பாதிக்கப்பட்டவர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்ததாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அன்புஜோதி ஆசிரமம் நிர்வாகி ஜூபின் பேபி அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டன.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த ஆசிரமத்தில் தங்க வைத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒரு சிலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பலர் சென்னையில் உள்ள அரசு காப்பகத்திலும் சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு நிர்வாகிகள் ஆய்வு சீல் வைத்தனர்.
மேலும் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்துள்ள பாதிக்கப்பட்டவரை பார்வையிட்டு விசாரணை நடத்தி வந்தார்.
பின்னர் இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தேசிய குழந்தை நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டன.
இதில் ஆர்டிஓ பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேல், சமூக நல அலுவலர் ராஜாம்பாள், சிபிசிஐடி போலீசார் ரேவதி மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் செய்தியாளரிடம் கூறுகையில்
அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு இரு அறைக்கு சீல் வைக்கப்பட்டன.
மேலும் நாங்கள் விசாரணை மேற்கொண்டதில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பத்து சதவீதம் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது.
அவர்கள் அனைவரும் போதை மாத்திரை கொடுத்து மனநல பாதிக்கப்பட்டவர்கள் என சித்தரிக்கப்பட்டவர்கள். அங்குள்ள அனைவருக்கும் போதை மாத்திரை கொடுத்து போதைக்கு அடிமையாக்கப்பட்டவர்கள், மேலும் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர்.
தற்பொழுது 15 பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர், எங்கே போனார்கள் என சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றன.
மேலும் சிபிசிஐடி போலீசாருக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து காப்பகத்தில் பணியாளர்களை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து போதை மாத்திரை எங்கிருந்து இவர்களுக்கு வந்தது என்பது குறித்தும் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை அந்த ஆசிரமத்தில் இருந்து 35 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அன்பு ஜோதி ஆசிரமத்தில் சுற்றித் திரிபவர்கள் பலரை அழைத்து வந்து போதை மாத்திரை கொடுத்து அவர்கள் இருட்டறையில் வைத்து கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர் என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளன.
இவர்கள் தனியாக செய்ய முடியாது இவர்கள் கூட யார் யார் தொடர்பு உள்ளார்கள் என்பது குறித்தும் மேலும் மத மாற்றம் செய்வதால் இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.
இதுகுறித்து ஒரு பெண் மற்றும் அவரது பிள்ளையிடம் நாங்கள் விசாரணை மேற்கொண்ட பொழுது கட்டாய மதமாற்றம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் சிபிசிஐடி போலீசார் ஒருபுறம் விசாரணை நடத்தி வருகின்றன. தொடர்ந்து விசாரணைக்கு பிறகு முழு அறிக்கையை சமர்ப்பிக்க சொல்லி உள்ளோம் இதுபோல் தமிழகத்தில் சமீப காலமாக ஒரு சில இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை ஆய்வு மேற்கொண்டு தடுக்கும் நடவடிக்கையில் குழந்தைகள் நலத்துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இதில் முழு விசாரணைக்குப் பிறகு அனைத்து விதமான நடவடிக்கைகளும் நாங்கள் எடுக்க தயாராக உள்ளோம். இவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு டெல்லியில் நாங்கள் இதுகுறித்து முழுமையான தகவலையும் தெரிவிப்போம் என்றார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.