HM காரில் விழுந்த துடைப்பம்.. மாணவருக்கு எலும்பு முறிவு.. அரசுப் பள்ளியில் தொடரும் அவலம்!

Author: Hariharasudhan
23 November 2024, 11:07 am

திருச்சியில், தலைமை ஆசிரியர் கார் மீது துடைப்பம் விழுந்ததால் அரசுப் பள்ளி மாணவரை சரமாரியாக அடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த பாப்பாபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் ஜெகன் (15) என்பவர், பள்ளி வளாகத்தின் மாடியில் உள்ள பள்ளி வகுப்பறையை தூய்மை செய்து உள்ளார்.

அப்பொழுது துடைப்பம் தவறுதலாக மாடியில் இருந்து, கீழ் பகுதியில் நின்று கொண்டு இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் காரின் மீது விழுந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமையாசிரியர், மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்று, யார் இதனைச் செய்தது எனக் கேட்டு விசாரித்து உள்ளார்.

அதற்கு, தவறுதலாக மாடியில் இருந்து கைதவறிக் கீழே போட்டதாக மாணவர் ஜெகன் கூறி உள்ளார். ஆனால், இதனைக் கேட்ட தலைமை ஆசிரியர், மாணவரை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் ஜெகனுக்கு கையில் எலும்பு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், உடலின் பல பாகங்களில் காயமும் ஏற்பட்டு உள்ளது.

Trichy thottiyam police station

பின்னர், இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர், அந்த மாணவரின் நிலையைக் கண்டு, அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு அவருக்கு கையில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்து உள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் மட்டும் கிடைப்பது ஏன்?

எனவே, மாணவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவர் மற்றும் அவரது பெற்றோர், பள்ளித் தலைமையாசிரியர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில், தொட்டியம் காவல் ஆய்வாளர் கதிரேசன், தலைமை ஆசிரியர் சந்திரமோகனை விசாரித்து வருவதோடு, மாணவன் தூய்மைப் பணி செய்தது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!