கனமழையால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.. கண்ணீரில் விவசாயிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 6:11 pm

தஞ்சையில் 2 நாட்கள் பெய்த கன மழையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகி உள்ளது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

இந்த திடீர் மழையினால் பல இடங்களில் இளம் பயிர்கள் தண்ணீர் சூழ்ந்துள்ள நிலையில் நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் முன்னைப் பட்டியில் அமைந்துள்ள நுகர் பொருள் வாணிப கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான மூட்டைகளில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்துள்ளது.

சிதறி கிடந்த நெல் மணிகள் இரண்டு நாள் மலையில் உழைத்து காணப்படுகிறது. திறந்தவெளி சேமிப்புக் கடந்த மழைநீர் சூழ்ந்தும் உள்ளது. இதை எடுத்து நெல் மூட்டைகளை மாற்றும் பணியை நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

அவ்வாறு மூட்டைகள் அவசர அவசரமாக லாரிகளில் ஏற்றி அனுப்பப்படும் போது ஏராளமான மூட்டைகள் சிதைந்து நெல்மணிகள் சிதறியும் வீணாகி உள்ளது. ஒருபுறம் மழையில் நனைந்தும் மறுபுறம் மூட்டைகள் உடைந்து சேதமாகி உள்ளது விவசாயிகளை வேதனை அடைய செய்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 635

    0

    0