கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்… கழிவுநீர் ஆற்றில் கலப்பதால் நிகழ்ந்த சோகம்… நடவடிக்கை எடுக்குமா கோவை மாநகராட்சி..?

Author: Babu Lakshmanan
17 May 2024, 12:50 pm

கோவை – மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரள மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் கலக்கிறது. மேலும், இந்த ஆற்றின் பாதையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி இருப்பதால் கோடைக் காலத்திலும் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.

மேலும் படிக்க: நீங்க பெண்களின் காவலரா..? எதிர்க்கட்சி தலைவராக அல்ல… ஒரு தந்தையாக கடுமையாக கண்டிக்கிறேன் ; திமுக மீது இபிஎஸ் ஆவேசம்!!

மேலும் இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குரும்பபாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுக்கரை அருகே செல்லும் ஆற்றுப் பாதை பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மஞ்சப்பள்ளம் ஆற்று நீர் வழிப் பாதையில் கலப்பதால் நீர்மாசு ஏற்பட்டு மீன்கள் இறந்து உள்ளன. எனவே, மதுக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இச்சம்பவம் மேலும் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!