ஆவினில் நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு : அதிகாரிகள் ஷாக்… நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 1:16 pm

வேலூர் சத்துவாச்சாரியிலிருந்து செயல்படும் ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழித்தடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டதாகவும் இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2500 லிட்டர் என பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனம் இயக்கப்பட்டது குறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இன்று விசாரணை நடைபெற உள்ளது.

ஒரே பதிவெண் கொண்ட வாகனத்தில் ஆவின் பால் திருடப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu