ஆன்லைனில் கடன் பெறாத இளம்பெண்ணுக்கு மிரட்டல் : APP LINKஐ கிளிக் செய்தவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீருடன் கெஞ்சும் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2022, 10:16 pm

கோவை : மொபைலில் வந்த ஆன்லைன் கடன் லிங்கை கிளிக் செய்ததால் கடன் வாங்கியதாக இளம்பெண்ணுக்கு செல்போன் மூலம் டார்ச்சர் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூரைச் சேர்ந்தவர் சரண்யா, படுகர் இனத்தைச் சேர்ந்த இவர் ஊட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மொபைல் போனில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்சப் குருந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதை என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார்.

அதில் ஆன்லைன் மூலம் லோன் தருவதாக வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கை விட்டு வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் லோன் எடுத்துள்ளீர்கள் அதற்கான தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர்.

அவர்களிடம் நான் லோன் வாங்கவே இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள் கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். சரண்யா முடியாது என கூறவே தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சரண்யாவின் குடும்பத்தினர் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாச வீடியோவாக சித்தரித்து அவருக்கே அனுப்பி லோன் தொகையை கட்டவில்லை என்றால் அனைவருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு சரண்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தான் எவ்வாறு ஏமாந்தேன் என்றும் இனி யாரும் வாட்சப்பில் வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம், அது போன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம், அது போல லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்யவும் என்னைப் போல் யாரும் கஷ்டப்படவேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என கண்ணிர் மல்க படுகர் மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?