திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உய்யகொண்டான் திருமலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனனி என்ற பெண், தான் இலங்கை அகதி என்றும், தனக்கு அப்பா, அம்மா இல்லை என்றும் வேலை கேட்டு வந்தபோது, சேல்ஸ் பெண்ணாக வேலை கொடுத்துள்ளார்.
விஜயலட்சுமிக்கு சிவக்குமார், செந்தில்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அவ்வபோது பர்னிச்சர் கடைக்கு வருவார்கள் இதில் செந்தில்குமார் ஜனனியுடன் பழகியுள்ளார்.
மேலும் ஜனனி, தாய், தந்தை இல்லாத பெண் என்பதால், அவ்வப்போது செந்தில்குமார் சிறுசிறு பண உதவிகள் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜனனியை தேடி பல ஆண் நபர்கள் கடைக்கு வந்து சென்றதால் ஜனனியை கண்டித்துள்ளார். ஆனால் ஜனனியோ அதை கேட்காமல் தொடர்ந்து அவரது போக்கில் சென்றுள்ளார்.
இதையும் படியுங்க: 47 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் புயல் மழை… கொங்கு மண்டலத்தை மிரட்டும் ஃபெஞ்சல்!
ஜனனியை கடை உரிமையாளர், விஜயலட்சுமி வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். ஆனால் ஜனனியோ தான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் எனவும், தனது கட்சி ஆட்களை வரவழைத்து உங்களை அசிங்கப்படுத்துவேன் என மிரட்டியதோடு மட்டுமல்லாமல், உன் மகன் செந்தில்குமார் மீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றியதாக புகார் கொடுத்து குடும்பத்தையே அசிங்கப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி இரவு விஜயலட்சுமியின் வீட்டிற்கு ஜனனி மற்றும் சென்னையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் என்று கூறப்படும் சுதாகர் மற்றும் இரண்டு நபர்களுடன் சென்று விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரை 4பேரும் சேர்ந்து அடித்து உதைத்து, கடுமையாக தாக்கியதோடு, ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் உங்களை விடுவேன், இல்லையென்றால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் துணையோடு உங்களை காலி பண்ணிடுவேன் என்றும், மேலும் சமூக வளைதளங்களில் செந்தில்குமார் தன்னை காதலித்து ஏமாற்றியதாக பொய்யாக செய்தி வெளியிட்டு, அசிங்கப்படுத்திவிடுவேன் எனவும், உயிரோடு எரித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் ஜனனியைப் பற்றி விஜயலட்சுமி விசாரணை மேற்கொண்டபோது தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் நோக்கம் உடையவர் என்றும் இதுபோன்று பலரை மிரட்டி பணத்தை அபகரித்துள்ளதாகவும், அதற்கு நாம் தமிழர் கட்சியினர் உடந்தையாக இருந்து மிரட்டி பணத்தை அபகரிப்பதும், இதேபோல முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள ராமர் என்பவரை காதலிப்பதாக கூறி பணத்தை ஏமாற்றி அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்குபதிவு செய்ய வைத்து பணத்தை அபகரித்துள்ளார் என பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகர், ராஜேஸ்குமார் மற்றும் டிசேந்தன் ஆகியோர் கைது செய்தனர்.
விஜயலட்சுமியின் மகன் செந்தில்குமாரிடம் தான் விவகாரத்து பெற்று விட்டதாகவும், ஜனனியிடம் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டதாகவும், மேலும் செந்தில்குமாரின் குடும்பத்தினர் தன்னை சித்திரவதை செய்து கொடுமைபடுத்தியதாகவும், ஜனனி மற்றும் செந்தில்குமார் தனிமையில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை காட்டி, சமூக வளைதளங்களில் பரப்பிவிடுதாக மிரட்டியது தொடர்பாக, ஏற்கனவே ஜனனி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை
மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.