செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் : கம்பிகளை பிடுங்கி வீசும் போதை ஆசாமியால் பரபரப்பு…!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 4:31 pm

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் எதிர்புறம் உள்ள செல்போன் டவரில் போதை ஆசாமி ஏறி தற்கொலை மிரட்டல் செய்து வருகிறார்.

இவர் கீழே இறங்குமாறு தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தும் போதை ஆசாமி செல்போன் டவர் உச்சியில் நின்று கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.

அதேபோல டவரில் உள்ள கம்பிகளை புடுங்கி கீழே வீசி வருவதால் அந்த பகுதியில் உள்ள செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தமிழக முழுவதும் உள்ள அனைத்து செல்போன் டவர்களிலும் கீழே இருந்து மேலே ஏறி செல்லாத முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!