டம்மி துபாக்கியை காண்பித்து திருநங்கையிடம் தகராறில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த யூடியூபர்கள் கைது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதியில் கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஆத்திரம் அடைந்து காரில் வந்த ஒருவர் சினிமா சூட்டிங்கிற்க்கு பயன்படுத்தபடும் பொய்யான ஏர்கன் பிஸ்டல் துப்பாக்கி காண்பித்து திருநங்கையை மிரட்டியதாக தெரிகிறது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து துடியலூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீஸ் சம்பவ இடத்திற்க்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து மூன்று பேரையும் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் மூவரும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த திலீப் (வயது 33), கிஷோர் (வயது 23), சமீர் (வயது 30) என்பதும் யூ டியூப் சேனல் நடிகர்கள், என்பதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ஆயுத தடை சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.