காதலிப்பதாக கூறி சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டல்.. இளைஞர்களுக்கு விருந்தாக்கிய காதலன் : திடுக்கிடும் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 12:41 pm

மதுரை : சிறுமியை காதலிப்பதாக கூறி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகை பறித்த மூன்று இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

மதுரை மாவட்டம் மங்கலம்பட்டியைச் சேர்ந்த 21 வயதான சிவராமன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிவராமன் சிறுமியை காதலிப்பதாக கூறி தன்னுடன் வெளியே வருமாறு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் 17 வயது சிறுமியை மேலூர் அருகே உள்ள கீழவளவு மலைப்பகுதிக்கு சிவராமன் அழைத்துச் சென்று தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த சிவராமனின் நண்பர்களான விஜயகுமார் வினோத்குமார் ஆகியோர் சிறுமியை மிரட்டி சிறுமியுடன் சேர்ந்து நின்று ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து சிறுமி அணிந்திருந்த தங்கச் செயினையும் பறித்து சென்றுள்ளனர். தொடர்ந்து அந்த வீடியோக்களை காட்டி சிறுமியிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் வரை பணம் மற்றும் நகைளை பறித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பிற்கு தெரிய வர சிறுமியின் தரப்பில் கே.புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிறுமியை ஆபாசப்படம் எடுத்து மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து வந்த சிறுமியின் காதலன் மற்றும் அவரது நண்பர்களை போக்க சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 472

    0

    0