ஆழியாருக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவர்கள் 3 பேர் நீரில் முழ்கி பலி : காண்போரை உருக்குலைத்த காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan25 April 2025, 1:40 pm
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோடை விடுமுறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
இதையும் படியுங்க: லிப்டில் வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. எல்லை மீறிய வாலிபர் எஸ்கேப் : சென்னையில் ஷாக்!
இன்று காலை கல்லூரி மாணவர்கள் குளிக்க ஆழியாறு அணையின் வாய்க்கால் பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.
ஆழமான சேற்றுப் பகுதிக்கு சென்ற தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப், ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியார் ஆற்றின் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இருந்து சுற்றுலா வந்த இடத்தில் கல்லூரி மாணவர்களில் மூன்று பேர் நீரில் மூழ்கி இறந்ததை பார்த்து மற்ற மாணவர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.