காணாமல் போன சிறுமி.. மிதந்த 3 சடலங்கள்.. உடுமலையை உலுக்கிய சம்பவம்!

Author: Hariharasudhan
21 December 2024, 2:27 pm

திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காணமல் போனயுள்ளார். எனவே, பெற்றோர் தரப்பில் தளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தப் புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குறிச்சிகோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குளத்தில் மிதந்த மூன்று சடலங்களையும் மீட்டனர். அப்போது, அதில் ஒரு சடலம் காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், மற்ற இரு சடலங்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Three included school girl death bodies founds in pond near udumalai

இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19) மற்றும் குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோரின் சடலங்கள் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: ’இரண்டாவது டார்கெட் கமிஷனர் ஆபீஸ்’.. 8 பேரின் கூட்டுச் சதி.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பல்வேறு கோணங்களில் அமராவதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay Sethupathi Smash Bigg boss Contestants ஜெப்ரிக்குனா மட்டும் எல்லாரும் வந்திருப்பாங்க.. பிக் பாஸ் போட்டியாளர்களை மிரள வைத்த VJS!
  • Views: - 65

    0

    0

    Leave a Reply