அட்லீ இயக்கத்தில் மூன்று கதாநாயகிகள்.? நயன்தாராவுக்கு முக்கியத்துவம் குறையுமா..?

Author: Rajesh
3 May 2022, 12:46 pm

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அட்லி, அதனை தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யை வைத்து படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்தார். அட்லி அதிக செலவு செய்கிறார். எடுக்கிற காட்சிகளில் பல காட்சிகள் பயன்படுத்துவதில்லை, பழைய படங்களை காப்பியடிக்கிறார் என அவர், மீது நிறைய புகார்கள் கூறப்பட்டாலும், விஜய்யின் மார்க்கெட் உயர்ந்ததற்கு அவருக்கு முக்கிய பங்கு உண்டு என்றே கூறலாம்.

இதனிடையே தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தில் அவருடன் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் மூன்று கதாநாயகிகள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் ப்ரியாமணி, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மூன்று கதாநாயகிகள் இருப்பதால், நயன்தாராவுக்கு முக்கியத்துவம் குறையுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ளது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1432

    0

    1